சினிமாவாகிறது சத்ரபதி சிவாஜியின் சிறுவயது வாழ்க்கை!

சினிமாவாகிறது சத்ரபதி சிவாஜியின் சிறுவயது வாழ்க்கை!

சத்ரபதி சிவாஜியின் சிறு வயது வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாகிறது.

மராட்டிய மன்னர்களில் மிக முக்கியமானவர் சத்ரபதி சிவாஜி. இவருடைய 392 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அவருடைய சிறு வயது வாழ்க்கையை திரைப்படமாக்க இருப்பதாக தேசிய விருது பெற்ற பிரபல மராட்டிப் பட இயக்குநர், ரவி ஜாதவ் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சந்தீப் சிங், இயக்குநர் ரவி ஜாதவ்
தயாரிப்பாளர் சந்தீப் சிங், இயக்குநர் ரவி ஜாதவ்

இதுபற்றி அவர் கூறியதாவது: சத்ரபதி சிவாஜியின் குழந்தைப் பருவ வாழ்க்கைத் திரையில் சொல்லப்படவில்லை. அவருடைய 12 வயது முதல் 16 வயது வரையிலான வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் படமாக்குகிறேன். படத்துக்கு பால் சிவாஜி (Bal Shivaji)என்று தலைப்பு வைத்துள்ளேன்.

லெஜண்ட் ஸ்டூடியோஸ் சந்தீப் சிங், ஆனந்த் மோஷன் பிக்சர்ஸ், ஈராஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்த இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தியாவில் ஆட்சி செய்த முக்கியமான மன்னர்களில் ஒருவருக்கு செய்யும் மரியாதையாக இந்தப் படம் இருக்கும். இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் படமாகவும் இது நிச்சயம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது போன்ற விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.