பிரச்சாரத்தில் நடிகர் அருள்மணி
பிரச்சாரத்தில் நடிகர் அருள்மணி

அதிமுக பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு... நெஞ்சுவலியால் பிரபல நடிகர் காலமானார்!

பிரபல திரைப்பட  நடிகர் அருள்மணி மாரடைப்பு காரணமாக  மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அருள்மணி
நடிகர் அருள்மணி

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருள்மணி. 'அழகி', 'தென்றல்', 'தாண்டவக்கோனே' உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது குணச்சித்திர நடிப்பு அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். நடிப்பில் கவனம் செலுத்தி வந்த போதும் இயக்குநர் பயிற்சி பள்ளி ஒன்றையும் இவர் நடத்தி வந்தார். 

அதனால் தமிழ் திரை உலகில் அனைவருக்கும் நன்கு நன்கு அறிமுகமானவர்.  அனைவரிடமும் எளிதில் பழகக்கூடியவர். இவருக்கு அரசியல் ஆர்வமும் உண்டு என்பதனால் அதிமுகவில் பணியாற்றி வந்தார். தற்போது மக்களவைத் தேர்தல் பணிகள் நடைபெறுவதால் அதிமுகவுக்கு  ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திலும்  ஈடுபட்டு வந்துள்ளார்.

நடிகர் அருள்மணி
நடிகர் அருள்மணி

இந்நிலையில்,  தீவிரப் பிரச்சாரத்திற்கு இடையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக உடனடியாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி அவர் நேற்று இரவு  உயிரிழந்தார்.  

சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு  திரையுலகினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in