அஜித் நடித்த 'வலிமை' படத்தின் கதை திருடப்பட்டதா?: ஒரு வருடத்திற்குப் பிறகு வழக்கு

அஜித் நடித்த வலிமை திரைப்பட கதை திருடப்பட்டதாக புகார்
அஜித் நடித்த வலிமை திரைப்பட கதை திருடப்பட்டதாக புகார்அஜித் நடித்த 'வலிமை' படத்தின் கதை திருடப்பட்டதா?: ஒரு வருடத்திற்குப் பிறகு வழக்கு

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்திற்கு எதிராக கதைத்திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித், ஹீமா குரேஷி உள்ளிட்டப் பலர் நடித்திருந்த படம் ‘வலிமை’. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்றது.

இப்படம் வெளியாகி ஒருவருடமாகக்கூடிய நிலையில், தற்போது படத்தின் மீது கதைத்திருட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராஜேஷ் ராஜா என்பவர் ‘வலிமை’ படக்குழுவுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்.

கடந்த 2019-ல் வெளியான தனது குறும்படமான ‘தங்கசங்கிலி’ என்பதில் இருந்து கிட்டத்தட்ட 10 காட்சிகள் அஜித்தின் ‘வலிமை’ படக்காட்சிகளோடு ஒத்துப் போவதாக புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தான் இயக்குநர் ஹெச்.வினோத்தை பலமுறை தொடர்பு கொண்டும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதையும் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து விரைவில் படக்குழு விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in