`விஜய் ஏற்றுக்கொண்டார், நீங்களும் ஏற்க வேண்டும்’- அஜித்துக்கு பெப்சி திடீர் கோரிக்கை

`விஜய் ஏற்றுக்கொண்டார், நீங்களும் ஏற்க வேண்டும்’- அஜித்துக்கு பெப்சி திடீர் கோரிக்கை

ஹைதராபாத்தில் செட் போட்டு படமாக்குவதற்கு பதிலாக சென்னையிலேயே படமாக்க வேண்டும் என்று நடிகர் அஜித்குமாருக்கு பெப்சி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``சில கதைகளுக்கு லொகேஷன் தேவைப்படும்போது வெளி மாநிலங்களில் போய் படப்பிடிப்பை நடத்தலாம். ஆனால், சென்னை மவுண்ட் ரோடு, உயர்நீதிமன்றம் போன்ற செட்களை ஹைதராபாத்தில் போய் போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை. உங்களை நேசிக்கின்ற ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்களின் வயிற்றில் மண்ணைப் போட்டுவிட்டு அங்கு போய் படமாக்குவது என்ன நியாயம் என்று தெரியவில்லை. இது தவறு. நடிகர் விஜய்யிடம் இந்த வேண்டுகோளை வைத்தோம். அவர் அதை ஏற்று, இங்கு படப்பிடிப்பை நடத்தினார்.

இப்போது அஜித்குமார் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அவருக்கு வேண்டுகோளாகவே வைக்கிறோம். ஹைதராபாத்தில் உங்கள் படப்பிடிப்பை நடத்துவதால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குத் தொழில் நஷ்டமும் பொருள் நஷ்டமும் ஏற்படுகிறது. இதனால் சென்னையில் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித்குமார் ஆகியோருக்கு வேண்டுகோளாகவே வைக்கிறோம்.

அரசு கொடுத்த இடமான பையனூரில், இந்தியாவிலேயே பெரிய ஷூட்டிங் புளோரும் ஆசியாவிலேயே பெரிய புளோர் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. மதில் சுவருடன் கூடிய இடம் இருக்கிறது. ஹைதராபாத் போய் போட வேண்டிய அரங்கத்தை இங்கேயே அமைக்கலாம்'' என்றார்.

Related Stories

No stories found.