அறையில் கார்பன் மோனாக்சைடு... பிரபல நடிகைகளின் ஆடை வடிவமைப்பாளர் மர்ம மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

அறையில் கார்பன் மோனாக்சைடு... பிரபல நடிகைகளின் ஆடை வடிவமைப்பாளர் மர்ம மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல நடிகைகளின் ஆடை வடிவமைப்பாளர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரதியுஷா கரிமெல்லா (35). இந்தியாவின் சிறந்த 30 ஆடை வடிவமைப்பாளர்களில் இவரும் ஒருவர். அமெரிக்காவில் பேஷன் டிசைனிங் முடித்த பிரதியுஷா, ஹைதராபாத்தில் வசித்து வந்தார். இவர், நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், பரினீதொ சோப்ரா, ஸ்ருதி ஹாசன், ஹூமா குரேஸி, ரகுல் பிரீத் சிங், வித்யா பாலன் உட்பட பலருக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர்.

ஹைதராபாத் பஞ்சராஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர், இன்று வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அவர் அறையில் கார்பன் மோனாக்சைடு பாட்டில் ஒன்று கிடந்தது. அதை சுவாசித்ததால் பிரதியுஷா உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதனால் முதலில் தற்கொலை என்று கூறிய போலீஸார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in