55 அடி உயர அஜித் கட்அவுட்டில் ஏறி பாலாபிஷேகம்: உயிரைப் பணையம் வைத்த ரசிகர்கள்!

55 அடி உயர அஜித் கட்அவுட்டில் ஏறி பாலாபிஷேகம்: உயிரைப் பணையம் வைத்த ரசிகர்கள்!

புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள 55 அடி உயர அஜித் கட்அவுட்டில் ஏறி ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. உயிரைப் பணையம் வைத்து ரசிகர்கள் செய்த செயல் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' திரைப்படம் வரும் 11-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இதேபோல, விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் ஜனவரி 11-ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி களம் காண்கிறது. இரு படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இரண்டு படங்களின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அஜித், விஜய் ரசிகர்கள் போட்டிப்போட்டு போஸ்டர் யுத்தம் தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள 55 அடி உயர அஜித் கட்அவுட்டில் ரசிகர்கள் ஏறி பாலாபிஷேகம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தை உணராமல் ரசிகர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்த செயல் அந்தப் பகுதியில் நடந்து சென்றவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in