வெரிஃபையோடு ட்விட்டருக்குள் வந்தார் நடிகர் விக்ரம்!

வெரிஃபையோடு ட்விட்டருக்குள் வந்தார் நடிகர் விக்ரம்!

நடிகர் விக்ரம் முதன் முறையாக அதிகாரபூர்வமாக ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். அவரை தற்போது 83 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்றுதான் சொல்ல முடியும். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதுவும் நடிகர், நடிகைகள் பலர் சமூக வலைதள பக்கங்களில் கணக்கு வைத்து தங்களது கருத்துகளையும் காணொலிகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோர் ட்விட்டரில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர். நடிகர் விஜய் பெயரில் ட்விட்டர் கணக்கு இருந்தாலும் அவர் அவ்வளவு ஆக்டிவ்வாக இருப்பதில்லை. எப்போதாவது ஒருமுறைதான் அப்டேட் வரும். அதுவும் விஜய் நேரடியாக நிர்வகிப்பதில்லை. அவரது அட்மின்கள்தான் நிர்வகிக்கிறார்கள்.

ஆனால், நடிகர்கள் அஜித், விக்ரம் ஆகியோர் சமூக வலைதளம் பக்கம் வராமல் இருந்தனர். தற்போது வெரிஃபைடு வாங்கிக் கொண்டு நடிகர் விக்ரம் ட்விட்டர் தளம் பக்கம் வந்துள்ளார். அதற்குள் 83.6 ஆயிரம் பேர் அவரைப் பின் தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராம் கணக்கில் விக்ரம் பெயரில் ஏற்கெனவே கணக்கு உள்ளது. அதில் அவர் அப்டேட் செய்து பல மாதங்கள் ஆகிவிட்டது. விக்ரம் ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே, விக்ரம் நடித்துள்ள `கோப்ரா' படம் வரும் 31-ம் தேதியும், அடுத்த மாதம் 31-ம் தேதி `பொன்னியின் செல்வன்' படமும் வெளியாக இருக்கிறது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in