வடிவேலுவின் பிறந்தநாளை தெறிக்கவிடும் ரசிகர்கள்: ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ சிறப்பு போஸ்டர் வெளியீடு!

வடிவேலுவின் பிறந்தநாளை தெறிக்கவிடும் ரசிகர்கள்: ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ சிறப்பு போஸ்டர் வெளியீடு!

நடிகர் வடிவேலுவின் பிறந்த நாளான இன்று, அவர் கதாநாயகனாக நடித்து வெளியாகவுள்ள ‘ நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வலுவேலு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரின் பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த சூழலில் லைகா நிறுவனம் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மேலும், ‘காமெடி ஐகான் வடிவேலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டு அவருக்கு மிகச் சிறப்பானதாக அமையும்’ என லைகா நிறுவனம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது

சினிமாவில் சில வருட இடைவெளிக்கு பிறகு ‘வைகைப்புயல்’ வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் மூலம் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் ஷிவானி, ரெடின் கிங்க்ஸ்லே என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றன.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இதுத்தவிர உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிவரும் ‘மாமன்னன்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் வடிவேலு நடித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக வடிவேலுவின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாததால் அவரின் ரசிகர்கள் சோர்வடைந்து இருந்தனர். இந்த ஆண்டில் அவரின் இரு படங்கள் வெளியாக உள்ளதால், சமூக வலைத்தளங்கள் முழுக்கவும் வடிவேலுவின் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு அவரின் பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in