நடிகர் சேஷூவுக்கு உதவினாரா சந்தானம்...கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

சேஷு சந்தானம்
சேஷு சந்தானம்

’லொள்ளு சபா’ புகழ் சேஷூ இன்று காலமாகியுள்ளார். அவரது எதிர்பாராத மரணம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அவரது மருத்துவமனை செலவுகளுக்கு சந்தானம் உதவி செய்தாரா என இணையத்தில் கேள்வி எழுந்துள்ளது.

சேஷு, சந்தானம்
சேஷு, சந்தானம்

சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சேஷூ. சந்தானம், ஜீவா, மாறன் என இவர்களது பின்னாளில் திரைத்துறைக்கு வந்தபோதும் குழுவாக பல படங்களில் பணியாற்றினர். குறிப்பாக, இவர்களில் நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கி தற்போது ஹீரோவாக வலம் வருகிறார்.

இவர் சேஷு உட்பட தனது ‘லொள்ளு சபா’ குழு பலருக்கும் தனது படத்தில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். அவர்களுடன் தொடர்ந்து பயணம் செய்வது மட்டுமல்லாது, இவர்கள் குழுவாக இணைந்து படங்களும் செய்திருக்கின்றனர்.

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்திலும் சேஷூவின் நகைச்சுவை கவனம் பெற்றிருந்தது. இந்த பட நிகழ்வுகளிலும் இருவரும் அன்பை வெளிப்படுத்தினர். சேஷூ உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவருடைய சிகிச்சைக்காக பொருளாதார உதவி இணையத்தில் கோரப்பட்டது.

என்னதான் நடிகர் சந்தானம் சேஷூவுக்கு பட வாய்ப்புகள் கொடுத்து உதவி இருந்தாலும் சிகிச்சைக்கு பணம் கொடுத்தாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னொரு பக்கம், பட வாய்ப்புகள் கொடுத்து அன்பு காட்டிய சந்தானம் நிச்சயம் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் கைவிட்டிருக்க மாட்டார் எனவும் அவருக்கு ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in