இலங்கையில் வறுமைக்கு நடுவிலும் 'பீஸ்ட்' பார்க்க குவிந்த ரசிகர்கள்!

இலங்கையில் வறுமைக்கு நடுவிலும் 'பீஸ்ட்' பார்க்க குவிந்த ரசிகர்கள்!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் நடிகர் விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தை அவரது ரசிகர்கள் 850 முதல் 3,000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் கொடுத்து பார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் பல மணி நேரம் ஏற்படும் மின்வெட்டால் சிறுதொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்து பொருட்கள் இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக அனைத்து பகுதி மக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் இலங்கை, கொழும்பு நகரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இலங்கை அரசு கடன் கேட்டு தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், 'பீஸ்ட்' படத்தை அவரது ரசிகர்கள், 850 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் கொடுத்து பார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.