அட்லீ பட லுக் ஹாலிவுட் காப்பியா?- ஹீரோவை கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

அட்லீ பட லுக் ஹாலிவுட் காப்பியா?- ஹீரோவை கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக், ஆங்கில படத்தின் அப்பட்டமான காப்பி என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இயக்குநர் அட்லீ, ஷாருக்கான் நடிக்கும் படத்தை இப்போது இயக்கி வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மற்றும் சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ஷாருக்கான் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் புணேவில் தொடங்கியது.

சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால், ஷூட்டிங் தடைப்பட்டது. பின்னர் ஷாருக், ’பதான்’ என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றார். அது முடிந்த பின் மும்பையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது.

இதற்கு ’ஜவான்’ என தலைப்பு வைத்துள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப் படம், பான் இந்தியா முறையில், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. கூடவே மிரட்டலான டீசரையும் படக்குழு வெளியிட்டது. அதில், முகம் முழுவதும் பேண்டேஜ் போட்டுக்கொண்டு ரத்தம் வழிய, ஷாருக்கான் சிரிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த தோற்றத்தை ரசிகர்கள் பலர் பாராட்டினாலும், இது 1990-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ’டார்க்மேன்’ என்ற சூப்பர் ஹீரோ படத்தின் அப்பட்டமான காப்பி என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கூறி வருகின்றனர்.

ரசிகர் ஒருவர், ஷாருக்ஜி, டார்க்மேன் படத்தைப் பார்க்கலையா? என்று கேட்டு, அந்தப் படத்தின் காட்சிக்கும் இந்தப் படத்தின் காட்சிக்குமான ஒற்றுமையை அப்படியே விவரித்துள்ளனர். இதே போல பல ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in