விஜய் ரசிகர்கள் உற்சாகம்... நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘லியோ’ வெற்றிவிழா!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

‘லியோ' படத்தின் வெற்றி விழாவை வரும் நவம்பர் 1ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த நிலையில் இந்த படம் குறித்த அப்டேட் வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்து கொண்டே இருந்தது.

அதாவது படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்துவதாக இருந்தது. ஆனால் அது திடீரென ரத்தாகிவிட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னால் அரசியல் இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவை படதயாரிப்பு நிறுவனம்தான் ரத்து செய்தது என விளக்கமளித்தனர்.

'லியோ' படத்தில் விஜய்
'லியோ' படத்தில் விஜய்

இதைத் தொடர்ந்து டிரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியிருந்ததால் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் படம் வெளியான பின்பு, படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இரு மாதிரியான விமர்சனங்கள் வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் லலித்குமார் படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி லியோ திரைப்படம் வெளியாகி 7 நாட்களில் ரூ 461 கோடி வசூலை குவித்துள்ளது என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வதால் பாதுகாப்பு கோரி படத் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in