அதிகரிக்கும் கெட்ட வார்த்தை... கோலிவுட் திரைப்படங்களில் புதிய டிரெண்ட் ஆகிறதா?

விஜயின் லியோ
விஜயின் லியோ

விஜய் நடித்த லியோ திரைப்படத்தை தொடர்ந்து, கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்திலும் கெட்ட வார்த்தை இடம்பெற்றிருப்பது ரசிகர்களை முகம்சுளிக்கச் செய்திருக்கிறது.

கதை மற்றும் காட்சிகளை யதார்த்தமாக வடிக்கிறோம் என்ற பெயரில் வன்முறை மற்றும் ஆபாசங்களை கட்டவிழ்ப்பது ஓடிடி தளங்களில் அதிகம். இந்த வரிசையில் கெட்ட வார்த்தைகளும் ஓடிடி படைப்புகளில் அதிகம் இடம்பெறும். ஆனால் திரையரங்குகளில் குடும்பத்தோடு சென்று பார்க்க வாய்ப்பாகும் திரைப்படங்களில் இம்மாதிரி வன்முறை, ஆபாசம் மற்றும் கெட்ட வார்த்தை பிரயோகங்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படும். ஒருசிலது தவிர்த்து வெகுஜன வரையறைக்குள் வரும் பெரும்பாலான திரைப்படங்கள் இவ்வாறு அமையும்.

ஆனால் வெகுஜன திரைப்படங்களிலும், விலக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசைகளை வைப்பது புதிய டிரெண்ட் ஆகிறதோ என்று கவலைப்படும் அளவுக்கு கோலிவுட்டின் போக்கு மாறி வருகிறது. விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற மது, புகை மற்றும் கெட்ட வார்த்தை பிரயோகங்கள் இவ்வாறு சர்ச்சைக்கு ஆளாயின. கடும் எதிர்ப்புகள் மற்றும் வழக்கு விசாரணைகள் என நீண்டதில், பின்னர் அவற்றில் மாற்றம் செய்யப்பட்டன.

கார்த்தியின் ஜப்பான்
கார்த்தியின் ஜப்பான்

தற்போது வெளியாகி இருக்கும், கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படத்துக்கான டிரெய்லர் காட்சியிலும் கெட்ட வார்த்தை இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களை வெகுவாய் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. கலைப்படங்கள் யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் நோக்கோடு எடுக்கப்படுவதால், அதில் இடம்பெறும் வன்முறை, பாலியல் மற்றும் வசை சொற்கள் குறித்து எவரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க விரும்பும் வெகுஜன நடிகர்களின் திரைப்படங்களிலும் அம்மாதிரி கெட்ட வார்த்தைகள் இடம்பெறுவதும், அதுவே புதிய போக்காக மாறுவதும் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!

போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!

கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!

பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!

குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in