
தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய திரைப்பிரபலங்கள் வெளியிட்ட புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், திரைப்பிரபலங்களும் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதையடுத்து, அவர்கள் தங்களின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதே போல் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி, அதன் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் அருண்விஜய், தந்தை விஜயகுமார், மனைவி ஆகியோருடன் வேட்டி அணிந்து தீபாவளி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் அருண் விஜய் பகிர்ந்து, தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடியுள்ள நடிகை தமன்னா, தீபாவளி சிறப்பு உடையுடன் தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
இவ்வாண்டு தலை தீபாவளி கொண்டாடும் ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் உள்ள புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள், இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருவதோடு, அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.