நடிகை கார்த்திகாவுக்கு மாப்பிள்ளை ரெடி! ஆனா யாருன்னு தெரியலையே?

நடிகை ராதா மகள், கார்த்திகாவுக்கு தடபுடல் திருமண ஏற்பாடு
நடிகை ராதா மகள், கார்த்திகாவுக்கு தடபுடல் திருமண ஏற்பாடு

நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவின் திருமணம் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை ராதா, 1980 காலகட்டத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ் என தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர்.

இவருடைய மகள் கார்த்திகா தமிழ் சினிமாவில் ஜீவாவுக்கு ஜோடியாக, ’கோ’ படத்தில் நடித்ததின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்த கார்த்திகா, அதன் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவிலிருந்து விலகினார்.

நடிகை கார்த்திகா
நடிகை கார்த்திகா

இந்நிலையில் கார்த்திகாவிற்கு வரும் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் கார்த்திகாவுக்கு எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அதிகாரபூர்வமாக நடிகை கார்த்திகாவே அறிவித்தும் இருந்தார்.

இதையடுத்து வருகிற 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் பிரம்மாண்டமான திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ராதாவின் சொந்த ஊர் கேரள மாநிலம் என்பதால் திருவனந்தபுரத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

குடும்பத்துடன் நடிகை கார்த்திகா
குடும்பத்துடன் நடிகை கார்த்திகா

திருமணம் முடிந்த பிறகு வரவேற்பு நிகழ்ச்சி கோவளம் கடற்கரையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராதாவின் உண்மையான பெயரான உதயசந்திரா என்ற பெயரில் உள்ள நட்சத்திர உணவகத்தில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிகிறது.

விரைவில் இதற்கான அதிகாரபூர்வ தகவலை நடிகை ராதா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கார்த்திகாவுக்கு திருமணம் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் குறித்த தகவல்கள் வெளியான போதும் இதுவரை கார்த்திகாவை மணமுடிக்கப் போகும் மணமகன் யார் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் அவரது புகைப்படமும் வெளியிடப்படவில்லை. இதனால் திருமணம் முடிந்த பிறகு அவரது அடையாளம் மற்றவர்களுக்கு தெரியவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in