
ஷாருக்கானை ஃபகத் ஃபாசிலுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு படக்குழு இன்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், நடிகர் ஷாருக் மொட்டைத் தலையுடன் ஆக்ரோஷமாக கையில் துப்பாகி பிடித்தபடி நிற்கிறார்.
இன்னொரு பக்கம் இன்று நடிகர் ஃபகத் ஃபாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘புஷ்பா2’ படக்குழு அவரது பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரத்திற்கான புதிய போஸ்டரினை வெளியிட்டுள்ளது. இதில் முதல் பாகத்தை விட இன்னும் ஆக்ரோஷமாக மொட்டைத் தலையுடன் சிகரெட் பிடித்தபடி இருக்கிறார் ஃபகத்.
இந்த இரண்டு போஸ்டர்களையும்தான் தற்போது ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இரண்டு பேருமே மொட்டைத்தலையுடன் கண்ணாடி அணிந்து கொண்டு கோபமாக இருப்பது பார்ப்பதற்கு சகோதரர்கள் போலவே இருக்கிறார்கள் என கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.
’புஷ்பா2’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ஃபகத், " முதல் பாகத்தை விடவும் இதில் பன்வர் சிங் அதிகம் வருவான். புஷ்பா, பன்வர் என இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நிறைய மோதல்கள் நடக்கும். இதை சுற்றியே கதை இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.