
பிக் பாஸ்7 நிகழ்ச்சியின் முதல் ரெட் கார்ட் இவருக்குதான் என ரசிகர்கள் கமென்ட் தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ்7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என வீடு இரண்டாகப் பிரிந்திருக்கும் நிலையில், வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சமைக்க முடியாது என ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள் ஸ்டிரைக் செய்தனர். இதனை, இந்த வார கேப்டன் சரவணன் முடித்து வைத்தார். இந்த ஸ்டிரைக் சமயத்தில் கேப்டன் சரவணனுக்கும் பிரதீப்பிற்கும் நடந்த வாக்குவாதத்தில் சரவணனைப் பார்த்து ‘உன் வாயை உடைத்து விடுவேன்’ என பிரதீப் கூறியுள்ளார்.
இவரது இந்த அத்துமீறிய பேச்சுக்கு சக போட்டியாளர்களைப் போலவே, பிக் பாஸ் பார்வையாளர்களும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரத்தில், இதேபோன்று மிரட்டல் விடுத்த காரணத்தினால் விஜய் வர்மாவுக்கு யெல்லோ கார்ட் காட்டினார் கமல்ஹாசன்.
இதேபோன்று, மூன்று முறை வாங்கினால் வீட்டை விட்டு வெளியேற நேரிடும் என்பதையும் சொல்லி இருந்தார். பிரதீப்பின் இந்த பேச்சுக்கும் ரெட் கார்ட் கமல்ஹாசன் காட்டுவாரா அல்லது கண்டித்து விட்டுவிடுவாரா என்பதைப் பார்க்கலாம்.