வேற லெவல்... கண்கலங்க வைத்துவிட்டார்: `டான்' படம் குறித்து ரசிகர்கள் தெறி கமென்ட்

வேற லெவல்... கண்கலங்க வைத்துவிட்டார்: `டான்' படம் குறித்து ரசிகர்கள் தெறி கமென்ட்

"வேற லெவல் படம், சிவகார்த்திகேயன் கண் கலங்க வைத்துவிட்டார், அப்பாவை தப்பா நினைக்கும் எங்களை உணர வைத்துவிட்டார்" என்று `டான்' படம் குறித்து ரசிகர்கள் தெறி கமென்டுகளை அள்ளி வீசினர்.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள `டான்’ படம் இன்று வெளியானது. கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கல்லூரி பின்னணியில் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதால் ஏராளமான இளைஞர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். படம் பார்த்து விட்டு வந்த ரசிகர்களின் தெறி கமென்ட்டை பார்ப்போம்.

படம் நல்லா இருக்கிறது, ஓகே ப்ரோ, ஆ, நல்லாயிருக்கு, பஸ்ட் ஆப் காமெடி, செகண்ட் ஆப் கண்கலங்க வைத்துவிட்டார் என்கின்றனர் ரசிகர்கள்.

படம் சூப்பராக இருந்தது என்று கூறிய ரசிகர் ஒருவர், கண்கலங்க வைத்துவிட்டார். அப்பா சென்டிமென்ட் படம். அப்பாவை எப்படி நாம தப்பா நினைக்கிறோமே அதை உணர வைத்துவிட்டார். நம்முடைய அப்பா நமக்கு எதுவும் பண்ணவில்லை என்று யோசிப்பாேம். ஆனால், அதை நல்லா உணர வைத்துவிட்டார். அப்பா எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதை சிவகார்த்திகேயன் உணர வைத்துவிட்டார்" என்றார்.

படம் ஒன் டே மேச் மாதிரி இருந்தது. பஸ்ட் ஆப் சுமாராக இருந்தது என்று ஒரு ரசிகர் சொல்ல, மற்றொரு ரசிகர், சிவகார்த்திகேயன் நடிப்பு சூப்பரா இருந்தது என்று கூறி ஆனந்தத்துடன் சென்றார். டிக்கெட் காசுக்கு ஒர்த்தான படம் என்றும் இது 2கே கிட்ஸ் படம். மாணவர்கள், குடும்பத்தினருக்கு இந்த படம் நன்றாக பிடிக்கும். எஸ்கே எஸ்கேதான் என்று ரசிகர்கள் ஆர்ப்பறித்தனர். படத்தில் குறையே இல்லை. படத்தை எத்தனை தடவையும் பார்க்கலாம் என்று குஷியாக சென்றனர் ரசிகர்கள். மொத்தத்தில் டான் டான்தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in