’இந்தியன்2’ முடிவில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... பரபரப்பு தகவல்!

 ’இந்தியன்2’
’இந்தியன்2’

’இந்தியன்2’ படப்பிடிப்பின் முடிவில் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் ‘இந்தியன்’. நாட்டில் நடக்கும் ஊழலுக்கு எதிராக நேர்மையாக இருக்கும் ஒருவனின் கோபம்தான் இந்தப் படத்தின் ஒன்லைன். இதில் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் கமல் நடித்திருப்பார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஜுன் மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் காரணமாக பட ரிலீஸ் ஜூலை தள்ளிப் போகலாம் என்று சொல்லப்படுகிறது. ’இந்தியன்’ படம் வெளியாகி சமீபத்தில் 28 வருடங்கள் ஆனதை ஒட்டி ஸ்பெஷல் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

’இந்தியன்2’ படம் ஆரம்பித்ததில் இருந்தே கொரோனா, படக்குழுவுக்குள் நடந்த பிரச்சினை, விபத்து, இதில் நடித்த நடிகர்கள் சிலரின் அடுத்தடுத்த இறப்பு போன்ற விஷயங்கள் தடையாக இருந்தது. அதையெல்லாம் தாண்டி, இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

'இந்தியன்2
'இந்தியன்2

இப்படி பல தடைகளைத் தாண்டி படம் வருவதால் ரசிகர்களுக்கு படத்தின் இறுதியில் சர்ப்ரைஸ் ஒன்றைப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதாவது, ‘இந்தியன்2’ படப்பிடிப்போடு ‘இந்தியன்3’ படப்பிடிப்பும் முடிந்துவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

இதனால், ‘இந்தியன்2’ படத்தின் இறுதியிலேயே ‘இந்தியன்3’ படத்தின் டீசரும் ஒளிபரப்பப் படக்குழு திட்டமிட்டுள்ளது என்பதுதான் அந்த சர்ப்ரைஸ். இந்த விஷயம் கேள்விப்பட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in