’இந்தி தெரியுமா?’- நடிகை சமந்தா சொன்ன பதில்!

’இந்தி தெரியுமா?’- நடிகை சமந்தா சொன்ன பதில்!

’இந்தி தெரியுமா?’ என்று கேட்டவருக்கு சமந்தா சிரித்துக் கொண்ட சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.

நடிகை சமந்தா, இப்போது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இதில் அவருடன் நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்துள்ளனர். இதையடுத்து ’ஷாகுந்தலம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்து யசோதா என்ற படத்திலும் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.

’த பேமிலிமேன் 2’ வெப் தொடர் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான சமந்தாவுக்கு ’புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ’ஊ சொல்றியா மாமா’ பாடல் மேலும் புகழை கொடுத்துள்ளது.

இந்நிலையில் நடிகை சமந்தா நேற்றிரவு மும்பை சென்றார். விமான நிலையத்தில் இருந்த மீடியா புகைப்படக் கலைஞர்கள், அவரை அடையாளம் கண்டு புகைப்படம் எடுத்தனர். ரசிகர்களும் செல்பி எடுத்தனர்.

முகக் கவசத்தைக் கழற்றி போஸ் கொடுத்த அவரிடம், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்? என்று கூறினர். அதற்குப் புன்னகையை பதிலாக தந்த சமந்தாவிடம், ’உங்களுக்கு இந்தி தெரியுமா? என்று ஒருவர் கேட்டார். அவரிடம், சிரித்துக்கொண்டே ’கொஞ்சம் கொஞ்சம் தெரியும்’ என்றார் சமந்தா.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in