நயன்தாராவை அப்படி சொல்வதா?: பிரபல இயக்குநரை விளாசும் ரசிகர்கள்

நயன்தாராவை அப்படி சொல்வதா?: பிரபல இயக்குநரை விளாசும் ரசிகர்கள்

நடிகை நயன்தாராவை சிறுமைப்படுத்தி விட்டதாகக் கூறி பிரபல இயக்குநரை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

பிரபல நடிகை சமந்தா, பிரபல இந்தி இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் , 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் வெளியான நிகழ்ச்சியில் நடிகர் அக்‌ஷய்குமாருடன் கலந்துகொண்டார். அப்போது கரண், 'தென்னிந்திய சினிமாவில் யார் முன்னணி நடிகை ?' என்று நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த சமந்தா, 'இப்போதுதான் நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடித்தேன்’ என்றார்.

இதன் மூலம் நயன்தாராதான் முன்னணி நடிகை என்பதை அவர் தெரிவித்தார். ஆனால், கரண் ஜோஹர், ’என் லிஸ்டில் அப்படி இல்லையே?’ என்று கூறிவிட்டு ஓர்மேக்ஸ் மீடியா கருத்துக்கணிப்பில் சமந்தாதான் நம்பர் ஒன் நடிகை என்று இருப்பதைக் குறிப்பிட்டார். இதையடுத்து நயன்தாரா ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கரண் ஜோஹரை விளாசித் தள்ளி வருகின்றனர்.

"நீங்கள் ரீமேக் செய்திருக்கும் 'குட்லக் ஜெர்ரி', நயன்தாரா நடித்த (கோலமாவு கோகிலா) படத்தின் ரீமேக் என்பதை மறந்து விடாதீர்கள். நயன்தாரா, அனுஷ்கா, அசின், த்ரிஷா உட்பட பல தென்னிந்திய நடிகைகள், உங்கள் ’வாரிசு’ நடிகைகளை விட சிறப்பாக நடிப்பவர்கள். திறமையால் உயர்ந்தவர்கள். ’வாரிசு’ நடிகைகளை விடவும் அருமையாக இந்தி பேசுபவர்கள்" என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலர், இயக்குநர் கரண், சமந்தாவின் கருத்தை உடனடியாக மறுத்ததன் மூலம் இரண்டு நடிகைகளையும் சிறுமைப்படுத்தி உள்ளார் என்றும் கரண், எப்போதும் தென்னிந்திய சினிமா மீது பொறாமைப்படுவது ஏன், அவருக்கு என்னாச்சு? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தச் சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in