`புஷ்பா2’ படத்தில் அல்லு அர்ஜூனைத் தேடும் ரசிகர்கள்!

அல்லு அர்ஜூன்
அல்லு அர்ஜூன்`புஷ்பா2’ படத்தில் அல்லு அர்ஜூனைத் தேடும் ரசிகர்கள்!

நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ படத்திற்கான புரோமோஷனை படக்குழு தொடங்கியுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜூன், பகத் பாசில், ராஷ்மிகா உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த 2021-ல் வெளியானது. நடிகர் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராகவும் சந்தனக் கடத்தல் செய்பவராகவும் இந்தப் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் நிலையில், இதன் புரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. அந்த வகையில், ‘புஷ்பா 2’ படத்தின் கான்செப்ட் டீசர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8-ம் தேதி வெளியாகிறது. இதற்கான சிறிய க்ளிம்ப்ஸ் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இதில் புஷ்பா ராஜின் வருகையை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும்படி ’Where is Pushpa?’ என தலைப்பிடப்பட்டு வெளியாகி இருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இதன் முதல் பாகத்தில் உலகம் முழுவதும் இதன் முதல் பாகம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in