‘பான் இந்தியன்’ சினிமாவில் கமல்?

நரங் சகோதரர்களுடன் கமல்
நரங் சகோதரர்களுடன் கமல்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து, கட்சிப் பணிகளை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு திரைப்படங்களில் நடிப்பதில் முழுக் கவனம் செலுத்திவருகிறார் கமல்ஹாசன். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 5-வது சீசனை சிம்பு தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 5-வது சீசனையும் கமலே தொகுத்து வழங்குவார் என்று சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது ‘இந்தியன் - 2’, ‘விக்ரம்’ படங்களில் நடித்துவரும் கமல் அடுத்ததாக, ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ‘பாகுபலி’ திரைப்படத்துக்குப் பின்பு, தேசிய அளவில் பல்வேறு மொழிகளில் வெளியிடப்படும் பான் இந்தியா திரைப்படங்களைத் தயாரிப்பதில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி தயாரிப்பாளர்களான நாரயண்தாஸ் நரங், பரத் நரங், சுனில் நரங், புஸ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் கமல்ஹாசனைச் சந்தித்துப் பேசியுள்ளனர். தற்போது நாக சைதன்யா, சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளிவரவுள்ள ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தைத் தயாரித்து முடித்துள்ள இவர்கள், அடுத்ததாக தனுஷ் நடிப்பில் சேகர் கம்முல்லா இயக்கவுள்ள திரைப்படத்தையும் தயாரிக்கவுள்ளனர். விரைவில் இவர்களது தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in