பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்
Updated on
1 min read

நடிகர் பார்த்திபன் நடித்த 'குண்டக்க மண்டக்க' படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். அசோகன் காலமானார். அவருக்கு வயது 64.

இயக்குநர் எஸ்.அசோகன் 'தமிழச்சி', 'பொன்விழா',' குண்டக்க மண்டக்க' உள்ளிட்ட திரைப்படங்களுக்குக் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ராஜலெட்சுமி என்ற மனைவியும் பகவத் கீதன் என்ற மகனும் உள்ளனர்.

சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்த எஸ்.அசோகன் மாரடைப்பால் இன்று காலமானார். அவரது உடல் சென்னையிலிருந்து எடுத்து வரப்பட்டு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை தெற்கு தெரு இல்லத்தில் வைக்கப்பட்டு அஞ்சலிக்கு பின் இன்றிரவு இறுதிச் சடங்குகள் நடைபெற்ற உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in