2 குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பிரபல பாடகி: வைரலாகும் புகைப்படம்

2 குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பிரபல பாடகி: வைரலாகும் புகைப்படம்

தனது இரண்டு குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாடகி சின்மயி பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல பாடகி சின்மயி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏராளமான பாடல்களை இவர் பாடியுள்ளார். அத்துடன் நடிகைகள் நயன்தாரா, த்ரிஷா ஆகியோருக்கு இவர் டப்பிங் பேசி வருகிறார். தனது நீண்ட காதலரான ராகுல் ரவீந்திரனை கடந்த 2014-ம் ஆண்டு சின்மயி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் அவருககு த்ரிப்தா, ஷர்வாஸ் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஒரே பிரசவத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்ததை சமூகவலைதளத்தில் சின்மயி அறிவித்தார்.

ஆனால், அவர் வாடகைத்தாய் மூலம் தான் குழந்தைகளைப் பெற்றெடுத்தார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தான் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளைப் பெறவில்லை என்று பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரண்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த பதிவைப் பார்த்து அவருக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in