பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மருத்துவமனையில் அனுமதி

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மருத்துவமனையில் அனுமதி

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிப்ரா புரொடக்சன்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் ரவீந்தர் சந்திரசேகர், ‘சுட்டகதை’, ‘நட்புனா என்னான்னு தெரியுமா’, ‘முருங்கக்காய் சிப்ஸ்’ உள்ளிட்ட படங்களை ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார்.

இவரும், சின்னத்திரை நடிகை மகாலட்சுமி சங்கரும் காதலித்து செப்.1-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். ரவீந்தர் சந்திரசேகர் தற்போது 'விடியும் வரை காத்திரு' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், ரவீந்தருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in