பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை காலமானார்

தில் ராஜுவின் தந்தை காலமானார்
தில் ராஜுவின் தந்தை காலமானார்
Updated on
1 min read

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி காலமானார். அவருக்கு வயது 86.

தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருபவர் தில் ராஜு. இவர் அண்மையில் நடிகர் விஜய் நடித்து வெளியான வாரிசு என்ற படத்தை தயாரித்தார். இதன் மூலம் தமிழில் அவர் பிரபலமானார்.

தில் ராஜுவின் தந்தை காலமானார்
தில் ராஜுவின் தந்தை காலமானார்

இந்த நிலையில் தில் ராஜுவின் தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று இரவு அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in