பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்...திரையுலகினர் அதிர்ச்சி!

குந்தரா ஜானி
குந்தரா ஜானி

ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் மலையாள நடிகர் குந்தரா ஜானி மாரடைப்பு காரணமாக காலமானார்.

பழம்பெரும் மலையாள நடிகர் குந்தரா ஜானி (71) நேற்று இரவு காலமானார். நெஞ்சுவலி காரணமாக கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு இறந்தார். 1979-ம் ஆண்டு 'நித்யா வசந்தம்' படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த அவர் மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். நான்கு தசாப்த கால வாழ்க்கையில், ஜானி 'மீன்', 'பரங்கிமலை', 'கரிம்பனா', 'காட்பாதர்', 'நாடோடிகாற்று', 'பரத்சந்திரன் ஐபிஎஸ்', 'ஸ்படிகம்' உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது திடீர் மறைவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in