பிரபல பாடலாசிரியரின் மகள் தூக்கிட்டு தற்கொலை: காரணம் இது தானா?

தூரிகை
தூரிகை

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலன். இவர் 'பாய்ஸ்', 'கில்லி', 'பேரழகன்', 'அந்நியன்', 'சந்திரமுகி', 'போக்கிரி', 'வேட்டைக்காரன்', 'சுறா;, 'காவலன்', 'கோ', 'வெடி', 'ஏழாம் அறிவு', 'அட்டகத்தி', 'மரியான்', 'மெட்ராஸ்', 'ஐ;, 'திரிஷா இல்லனா நயன்தாரா', 'கபாலி' உள்பட ஏராளமான படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்.

பாடலாசிரியர் கபிலன்.
பாடலாசிரியர் கபிலன்.

இவரது மகள் தூரிகை. சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏவில் உள்ள வீட்டில் தூரிகை இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி கேட்டு திரையுலகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தற்கொலை செய்த தூரிகையின் உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அருகம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து எதற்காக தூரிகை தற்கொலை செய்து கொண்டார் என விசாரித்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு ”பீயிங் வுமன் (Being Women Magazine ) என்ற இணைய இதழைத் தொடங்கி அதில் பெண்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கட்டுரைகளை தூரிகை எழுதி வந்தார். அத்துடன் தி லேபிள் கீரா (the label keera)எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் அவர் நடத்தி வந்தார். திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு செய்தி கேட்டு கபிலனுக்கு தமிழ் திரையுலகத்தினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in