சூதாட்டத்தில் ரூ.150 கோடியை இழந்தார் ரஜினிகாந்த்... பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூதாட்டத்தில் 150 கோடி ரூபாயை இழந்துள்ளதாக பத்திரிகை பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளது திரை உலகில் மட்டுமில்லாது தமிழக மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் திரை உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் எளிமையான வாழ்க்கையையே தேர்ந்தெடுத்து வாழ்பவர். முன்னணி நடிகராக இருந்தபோதிலும் அவர் தனது பழைய அம்பாசிடர் காரில் தான் வெகு காலம் வரை படப்பிடிப்புக்கு வந்து கொண்டிருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் தான் அம்பாசிடரில் இருந்து இன்னோவா காருக்கு மாறினார்.

தற்போது அவர்  நடித்த 'ஜெயிலர்' படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அவருக்கு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை கலாநிதி மாறன் பரிசாக வழங்கினார். அந்த காரில் சென்றபோதுதான் தனக்கு பணக்காரனான ஃபீல் வந்ததாக  சக்சஸ் மீட்டில் ரஜினிகாந்த் கூறியிருந்தார். 

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினியின் இந்த பேச்சுக்கு பின்னால் இருக்கும் விஷயங்களை பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். " தொடர்ந்து தனது அம்பாசிடர் காரை பயன்படுத்தி வந்த ரஜினி,  பின்னர் இன்னோவா காருக்கு மாறினார். கலாநிதி மாறன் கார் கொடுப்பதற்கு முன்பு வரை அவர் அந்த காரில் தான் பயணித்து வந்தார். 

இந்தமாதிரியான கார்களில் பயணம் பண்ணிய ரஜினிக்கு, திடீரென ஒரு லக்ஸூரியான காரில் பயணிக்கும் போது அடடா இது பணக்காரங்க ஓட்டுகிற கார் என்கிற ஃபீல் வந்துதான் அவர் 'ஜெயிலர்' சக்சஸ் மீட்டில் தான் பணக்காரன் போல் உணர்வதாக கூறி இருக்கலாம்.

பிஸ்மி
பிஸ்மி

ரஜினி எவ்வளவு பெரிய செல்வந்தர், அவரிடம் உள்ள கோடிகளை எண்ண இரண்டு கை பத்தாது. அத்தனை கோடிகளை அடுக்கி வைத்திருந்தாலும், அவர் மனதளவில் மிகவும் எளிமையானவராகத்தான் இருக்கிறார். அதேபோல் ரஜினி,  இப்போதான் பணக்காரனாக உணர்வதாக கூறியதை ஒரு மிகைப்படுத்திய பேச்சாகவும் பார்க்க முடிகிறது. ஏனெனில் ரஜினி ஒரு சாதாரண வாழ்க்கையை வாழவில்லை. பல ஆண்டுகளாக கோடீஸ்வரனாகவே உள்ளார்.

திடீர்னு 100 கோடி, 150 கோடி சம்பளம் வாங்கிட்டு, அந்த பணத்தையெல்லாம் எப்படிடா செலவழிப்பது என தெரியாமல், லாஸ்வேகாஸ் கிளம்பிப்போய் அங்கு சூதாடி, இந்த சம்பாதித்த பணத்தையெல்லாம் தோத்துட்டு அப்பாடா என மனசு ரிலாக்ஸாகி வருகிற வாழ்க்கையைத் தான் ரஜினி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  அதைப் பார்க்கும்போது காருக்குள்ள உட்காரும் போதுதான் பணக்காரனா ஃபீல் பண்ணதா அர்த்தம் இல்லை. நீங்க லாஸ்வேகாஸில் சூதாடும்போதே அது தெரிஞ்சு போச்சு" என பிஸ்மி கூறியுள்ளது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in