சோகம்...பிரபல ஹாலிவுட் நடிகர் மாரடைப்பால் மரணம்!

டெய்லர் கிறிஸ்டோபர்
டெய்லர் கிறிஸ்டோபர்

பிரபல ஹாலிவுட் நடிகர் டெய்லர் கிறிஸ்டோபர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

’ஜெனரல் ஹாஸ்பிட்டல்’, ‘டேய்ஸ் ஆஃப் அவர் லைவ்ஸ்’ போன்ற படங்கள் மூலம் புகழ்பெற்ற அமெரிக்க நடிகரான டெய்லர் கிறிஸ்டோபர் தனது ஐம்பதாவது வயதில் மாரடைப்பால் காலமானார். இந்த தகவலை அவரது நண்பரும், சக நடிகருமான மாரிஸ் பெனார்ட் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

டெய்லர் கிறிஸ்டோபர்
டெய்லர் கிறிஸ்டோபர்

இதுகுறித்து மாரிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டெய்லரின் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘டெய்லர் கிறிஸ்டோபர் இப்போது நம்முடன் இல்லை என்ற செய்தியை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். சான் டியோகாவில் உள்ள அபார்ட்மெண்ட்டில் அவர் மாரடைப்பால் இறந்துள்ளார்.

திரையில் டெய்லர் தோன்றும் போதெல்லாம் தனது திறமையான நடிப்பால் ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்து தனது ரசிகர்களை மகிழ்விப்பார். அவர் மிகவும் இனிமையானவர். மன அழுத்தம் மற்றும் குடிக்கு எதிராக சிறந்த முறையில் ஆலோசனை அவர் கொடுத்து வந்திருக்கிறார்.

அவரை இழந்து வாடும் அவரது குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் இறைவன் வலுவைத் தரட்டும்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு அவரது ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் பதிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in