சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரபல இயக்குநர்?

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரபல இயக்குநர்?

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல இயக்குநர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் ’டான்’ படத்தை அடுத்து, தெலுங்கு இயக்குநர் கே.வி.அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ’எஸ்கே 21’ என்று கூறப்படும் இந்தப் படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துவிட்டது.

அடுத்து 'ரங்கூன்' இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் அவர் ஜோடியாக, சாய் பல்லவி நடிக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

மிஷ்கின்
மிஷ்கின்

இந்தப் படத்தை அடுத்து ‘மண்டேலா’ இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில் ’எஸ்கே 23’ என்ற படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இதில் அவர் ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருப்பதாகவும் இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in