உங்கள் படம் சூப்பர்: பா.ரஞ்சித்திற்கு பிரபல பாலிவுட் இயக்குநர் பாராட்டு

உங்கள் படம் சூப்பர்: பா.ரஞ்சித்திற்கு  பிரபல பாலிவுட் இயக்குநர் பாராட்டு

தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் படத்தைப் பார்த்து பிரபல இந்தி பட இயக்குநர் அனுராக் காஷ்யாப் கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார்.

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித், தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் ஆக. 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் நடைபெற்றது. இதில் பிரபல இந்தி பட இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தைப் பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப். படம் நன்றாக உள்ளதாகக் கூறி பா.ரஞ்சித்தைக் கட்டிப்பிடித்துப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. ஏற்கெனவே பாலா, அமீர், சசிகுமார் மற்றும் தியாகராஜன் குமாரராஜா போன்ற இயக்குநர்களின் படங்களைப் பார்த்து அனுராக் காஷ்யப் பாராட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in