பிரபல நடிகையின் தாய் மரணம்: திரையுலகினர் அஞ்சலி

பிரபல நடிகையின் தாய் மரணம்: திரையுலகினர் அஞ்சலி

நடிகை ஸ்ரீப்ரியாவின் தாய் கிரிஜா பக்கிரிசாமி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீப்ரியா. இவர் 'முருகன் காட்டிய வழி' திரைப்படத்தின் மூலம் 1974-ம் ஆண்டு, திரையுலகில் அறிமுகமானார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் மட்டும் 200 படங்களில் அவர் நடித்துள்ளார். நடிப்பதோடு தயாரிப்பு, இயக்கம், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்ட ஸ்ரீப்ரியா, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.

இவரின் தாயாரான கிரிஜா பக்கிரி சாமி, உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 81. இவர் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரான காரைக்கால் நடேசன் பக்கிரிசாமி பிள்ளையின் மனைவியாவார்.

அத்துடன் 'காதோடு தான் நான் பேசுவேன்' படத்தையும் அவர் இயக்கி உள்ளார். 'நீயா', 'நட்சத்திரம்' ஆகிய திரைப்படங்களை மகளுடன் சேர்ந்து தயாரித்திருந்தார். இவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in