நித்யானந்தாவை ரகசியமாக சந்திக்கும் பிரபல நடிகை: கைலாசா சென்று வருவதன் பின்னணி

நித்யானந்தாவை ரகசியமாக சந்திக்கும் பிரபல நடிகை: கைலாசா சென்று வருவதன் பின்னணி

சாமியார் நித்யானந்தாவை சந்திக்க கைலாசாவிற்கு நடிகை கௌசல்யா அடிக்கடி சென்று வருவதாக கூறப்படுகிறது.

சர்ச்சை சாமியார் நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2018-ம் ஆண்டு தலைமறைவான நித்யானந்தா, தனக்கென ஒரு தீவை விலைக்கு வாங்கி அந்த இடத்திற்கு கைலாசா எனப் பெயரிட்டு, அங்கு வசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. அடுத்த சில தினங்களில், ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என முகநூல் பதிவின் மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். ஆனாலும், நித்யானந்தா உடல் நலக்குறைவால் இருப்பதை அவர் வெளியிட்ட படங்களும், அவர் கடிதமும் உறுதி செய்தன. இதைத் தொடர்ந்து குருபூர்ணிமா அன்று நேரலையில் தோன்றிய நித்யானந்தா, வழக்கம் போல ஆங்கிலத்திலும், தமிழிலும் உற்சாகமாக உரையாற்றினார்.

இந்நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக அடைக்கலம் வழங்குமாறு இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கேவுக்கு நித்யானந்தாவின் சீடர்கள் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் நித்யானந்தாவின் கைலாசாவிற்கு நடிகை கௌசல்யா அடிக்கச் சென்று வருகிறார்.

பல ஆண்டுகளாக முதுகு வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த கௌசல்யாவின் முதுகுவலியை நித்யானந்தா தான் சரி செய்ததாக கூறப்படுகிறது. அதனால் அவரின் தீவிர பக்தையாக மாறிய கௌசல்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. நடிகர்கள் விஜய்,பிரபுதேவா, முரளி உள்பட பலருடன் ஜோடியாக நடித்த அவர் தற்போது கதாநாயகர்களின் தாயாக திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் ரகசியமாக அடிக்க கைலாசாவிற்கு அவர் சென்று வருகிறார். ஏற்கெனவே நடிகை ரஞ்சிதாவால் பிரச்சினைக்குள்ளான நித்யானந்தாவை சந்திக்க நடிகை கௌசல்யா சென்று வருவது திரைப்படத்துறையினர் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in