லடாக்கில் அஜித்துடன் பைக்கில் இணைந்த பிரபல நடிகை: அட்டகாச புகைப்படங்கள்!

லடாக்கில் அஜித்துடன் பைக்கில் இணைந்த பிரபல நடிகை: அட்டகாச புகைப்படங்கள்!

லடாக்கில் பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்துடன், பிரபல நடிகை மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார்.

அஜித்குமார் பைக் ரேசர் என்பது ஊரறிந்த விஷயம். இதனால் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் பைக் ட்ரிப் அடிப்பது அவரின் வழக்கம். சமீபத்தில் கூட அஜித் குமார் ஐரோப்பா நாடுகளில் பைக்கில் சுற்றிக்கொண்டிருந்த புகைப்படங்கள் வைரலாகியது.

தற்போது லடாக் பகுதியில் அஜித் குமார் பைக்கில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள்தான் இப்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இன்று லடாக்கில் அஜித் பைக்கில் வேகமாக உலா வரும் வீடியோ ஒன்று படுவைரலானது. இந்த நிலையில் பிரபல நடிகை மஞ்சு வாரியரும் அஜித்தின் இந்த லடாக் பைக் பயணத்தில் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகிவரும் ‘ஏகே 61’ படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in