இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது பிரபல நடிகை போலீஸில் புகார்

நடிகை கராத்தே கல்யாணி.
நடிகை கராத்தே கல்யாணி.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ஆல்ப பாடல் இந்து மதத்தை புண்படுத்துவதாக பிரபல தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி போலீஸில் புகார் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் 'சச்சின்', 'வில்லு', 'கந்தசாமி', 'சிங்கம்', 'வீரம்', 'தி வாரியர்' உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத். ரசிகர்களால் ' டிஎஸ்பி' என அழைக்கப்படும் இவர் அவ்வப்போது தனி ஆல்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் இசையமைத்த 'புஷ்பா' படப்பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. சமீபத்தில் 'ஓ பேபி' என்ற இசை ஆல்பத்தை தேவி ஸ்ரீ பிரசாத் வெளியிட்டார்.

தேவி ஸ்ரீ பிரசாத்
தேவி ஸ்ரீ பிரசாத்

இந்த ஆல்பம் தெலுங்கில் 'ஓ பாரி' என்ற பெயரில் வெளியானது. இந்த பாடலை ரகீப் ஆலம் எழுதியுள்ளார். தற்போது இந்த பாடலில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள், இந்து மதத்தினரைப் புண்படுத்துவதாக பிரபல தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி ஹைதராபாத் நகரில் உள்ள சைராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில்," பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்,'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' எனும் இந்து ஸ்லோகங்களை, அவர் சமீபத்தில் வெளியிட்ட தனிப்பட்ட பாடலில் பயன்படுத்தியுள்ளார். இதனால், தானும், தான் சார்ந்த இந்து சமூகம் புண்பட்டுள்ளது " என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக கராத்தே கல்யாணிக்கு சம்மன் கொடுத்து நேரில் வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்திடம் அவர்கள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் மீது நடிகை போலீஸில் புகார் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in