உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல நடிகை: காதலன் கொடுத்த மனஉளைச்சலால் தற்கொலையா?

உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல நடிகை:  காதலன் கொடுத்த மனஉளைச்சலால் தற்கொலையா?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது காதலன் கொடுத்த மனஉளைச்சலால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்காளம்,கொல்கத்தா நகரின் நாகர்பஜார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பிதிஷா டி மஜூம்தார்(21). பிரபல மாடலான இவர் வங்காள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டில் வெளியான குறும்படத்தில் பிதிஷா அறிமுகமானார். அந்த படத்தில் பிரபல நடிகர் தேப்ராஜ் முகர்ஜி நாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், பிதிஷா தனது குடியிருப்பில் மர்மமான முறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு சென்ற பேரக்பூர் போலீஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பிதிஷாவின் உடலை கைப்பற்றி ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அத்துடன் வீட்டில் இருந்த இருந்து தற்கொலை கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். நடிகை பிதிஷாவிற்கு அனுபாப் பெரா என்ற காதலன் இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பிரிஷா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். பிதிஷாவின் தற்கொலைக்கு காரணம் யார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் மேற்கு வங்க நடிகை பல்லவி தேவ் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த குறித்த செய்தி வெளியான போது ‘என்னால் நம்பவே முடியவில்லை. அத்தனை தைரியமானவர் பல்லவி’ என தனது சமூக வலைப்பக்கத்தில் நடிகை பிதிஷா பதிவிட்டிருந்தார். தற்போது அவர் தற்கொலை செய்து கொண்டது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in