பிரபல நடிகர் பிரதாப் போத்தன் திடீர் மரணம்

பிரபல நடிகர் பிரதாப் போத்தன் திடீர் மரணம்

பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 70.

வறுமையின் நிறம் சிவப்பு, பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரதாப் போத்தன். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது, கேரள மாநில திரைப்பட விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் பிரதாப் போத்தன்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் பிரதாப் போத்தன் இன்று காலை திடீரென காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in