நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் அனுமதி; வெற்றிகரமாக நடந்து முடிந்த அறுவை சிகிச்சை!

நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் அனுமதி; வெற்றிகரமாக நடந்து முடிந்த அறுவை சிகிச்சை!

நடிகர் சிரஞ்சீவி நீண்ட நாட்களாகவே முழங்கால் வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிரஞ்சீவிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் ‘போலோ சங்கர்’ படம் சமீபத்தில் வெளியானது. தமிழில் வெளியான ‘வேதாளம்’ படத்தின் கதையான இதில் தமன்னா, கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் சிரஞ்சீவி முழங்கால் வலியால் அதிகம் அவதிப்பட்டதாக நடிகை தமன்னா தெரிவித்திருந்தார்.

சிரஞ்சீவி நீண்ட நாட்களாகவே முழங்கால் வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்து டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிரஞ்சீவிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை நடந்தது.

ஒரு வாரம் மருத்துவமனையிலேயே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் அதன் பிறகு ஐதராபாத் திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் மூன்று மாத கால ஓய்வுக்கு பிறகு புதிய படங்களில் அவர் நடிக்கவுள்ளார்.

சிரஞ்சீவிக்கு ஏற்கனவே 2016-ம் ஆண்டில் வலது மற்றும் இடது தோள்பட்டைகளில் அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிரஞ்சீவியைப் போலவே முழங்கால் வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் நடிகர் பிரபாஸும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in