12 பிரிவுகளில் ஃபிலிம் ஃபேர் விருதுக்குத் தேர்வான ‘தி ஃபேமலி மேன்’

12 பிரிவுகளில் ஃபிலிம் ஃபேர் விருதுக்குத் தேர்வான ‘தி ஃபேமலி மேன்’

ராஜ் மற்றும் டீக்கே இயக்கத்தில், கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான தொடர் ‘தி ஃபேமலி மேன்’. மனோஜ் பாஜ்பாய், பிரியா மணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இத்தொடரின் 2-வது சீசன் கடந்த ஜூன் மாதம் வெளியானது. சமந்தா, விடுதலைப் புலிகள் கதாபாத்திரத்தில் நடித்த இந்த 2-வது சீசனுக்கு வரவேற்பும் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. இலங்கையிலிருந்து தீவிரவாத தாக்குதலுக்காக இந்தியா வரும் ஒரு மனித வெடிகுண்டுப் பெண்ணாக, சமந்தா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தத் தொடருக்குத் தமிழ்நாட்டில் சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது என்றாலும், சமந்தாவின் நடிப்பு பரவலான பாராட்டுகளைக் குவித்தது. இந்நிலையில் இந்தத் தொடர் ஃபிலிம் ஃபேர் விருதுக்கு சிறந்த தொடர், சிறந்த இயக்குநர், நடிகர், நடிகை, ஒரிஜினல் ஸ்டோரி, குணசித்திர நடிகை உள்ளிட்ட முக்கியமான 12 பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in