அக்காவுக்கு வளைகாப்பு; தங்கைக்குத் திருமணம்!- பிரபல நடிகைகள் வீட்டில் கொண்டாட்டம்

அக்காவுக்கு வளைகாப்பு; தங்கைக்குத் திருமணம்!- பிரபல நடிகைகள் வீட்டில் கொண்டாட்டம்
டாக்டர் அசீஷ் பாஷா, சஞ்சனா கல்ராணி

நடிகை சஞ்சனா கல்ராணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, பெங்களூருவில் நடந்தது.

பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் தமிழில் 'ஒரு காதல் செய்வீர்' என்ற படத்தில் அர்ச்சனா கல்ராணி என்ற பெயரில் நாயகியாக நடித்துள்ளார். கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சஞ்சனா, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி.

நடிகை சஞ்சனாவுக்கும் டாக்டர் அசீஷ் பாஷா என்பவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணமானது. ஆனால், அதை வெளிப்படையாக அவர்கள் அறிவிக்கவில்லை. நடிகை சஞ்சனா, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட போது இந்த விவகாரம் வெளிவந்தது. இந்த வழக்கில் சஞ்சனா ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

டாக்டர் அசீஷ் பாஷா, நடிகை சஞ்சனா
டாக்டர் அசீஷ் பாஷா, நடிகை சஞ்சனா

இந்நிலையில், நடிகை சஞ்சனா நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு நேற்று முன்தினம் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அவருடைய நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கலந்துகொண்டனர். இதுதொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்னும் 20 நாட்களில் சஞ்சனாவுக்கு குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே நடிகை சஞ்சனாவின் தங்கை நடிகை நிக்கி கல்ராணிக்கும் நடிகர் ஆதி பினிஷெட்டிக்கும் வரும் 18 -ம் தேதி சென்னையில் திருமணம் நடக்க இருக்கிறது.

சஞ்சனாவின் சகோதரி நிக்கி கல்ராணி, நடிகர் ஆதி பினிஷெட்டி
சஞ்சனாவின் சகோதரி நிக்கி கல்ராணி, நடிகர் ஆதி பினிஷெட்டி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in