சிம்புவுக்கு வில்லனாகிறார் பகத் பாசில்?

பகத் பாசில்
பகத் பாசில்

பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், சிம்புவுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஜீவா நடித்த ’ரவுத்திரம்’, விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ’ கார்த்தி நடித்த ’காஷ்மோரா’, விஜய் சேதுபதியின் ’ஜூங்கா’, ’அன்பிற்கினியாள்’ படங்களை இயக்கிய கோகுல், அடுத்து சிம்பு நடிக்கும் ’கொரோனா குமார்’ படத்தை இயக்க இருக்கிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

சிம்பு
சிம்பு

இதில் சிம்புவுக்கு வில்லனாக நடிகர் பகத் பாசில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மலையாள நடிகரும் நடிகை நஸ்ரியாவின் கணவருமான பகத் பாசில், வேலைக்காரன் படம் மூலம் தமிழுக்கு வந்தார்.

தற்போது கமல்ஹாசனுக்கு வில்லனாக 'விக்ரம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திலும் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in