'நிலை மறந்தவன்’ஆனது பகத் பாசிலின் மலையாள ’டிரான்ஸ்’!

'நிலை மறந்தவன்’ஆனது பகத் பாசிலின் மலையாள ’டிரான்ஸ்’!
நிலை மறந்தவன்- பகத் பாசில்

பகத் பாசில் நடித்து மலையாளத்தில் வெளியான 'டிரான்ஸ்' படம், தமிழில் 'நிலை மறந்தவன்' என்ற பெயரில் வெளியாகிறது.

பஹத் பாசில், நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன், திலீஷ் போத்தன், செம்பான் வினோத், விநாயகன் உட்பட பலர் நடித்த மலையாள படம், ’டிரான்ஸ்’. பிரபல இயக்குநர் அன்வர் ரஷீத் தயாரித்து இயக்கி இருந்தார். மதத்தின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலி கும்பல்.

நிலை மறந்தவன்- பகத் பாசில்
நிலை மறந்தவன்- பகத் பாசில்

படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமலேயே இந்த மோசடிக்குத் துணை போகிறான். ஒருகட்டத்தில் உண்மை தெரிய வரும்போது அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு அமல் நீரத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்ஸன் விஜயன், சுஷின் ஷியாம் இசை அமைத்துள்ளனர். இந்தப் படம் தமிழில் ‘நிலை மறந்தவன்’என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தமிழில் வெளியிடுகிறது.

Related Stories

No stories found.