`தளபதி 67’-ல் நடிக்கும் பகத் ஃபாசில்?

`தளபதி 67’-ல் நடிக்கும் பகத் ஃபாசில்?

‘தளபதி 67’ படத்தில் பகத் ஃபாசில் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

நடிகர் விஜய், த்ரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படம் குறித்தான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தப் படத்தில் தான் நடிக்க வாய்ப்புள்ளதாக நடிகர் பகத் ஃபாசில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவரிடம் ‘தளபதி 67’ படத்தில் நடிப்பீர்களா எனக் கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த பகத் ஃபாசில், ‘’தளபதி 67’ திரைப்படம் லோகேஷ் யுனிவர்ஸ் கீழ் வந்தது என்றால் நான் நடிக்க வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், ‘’விக்ரம்’ படத்தில் உங்கள் அமர் கதாபாத்திரத்திற்கு தனிப் படம் வருமா?’ எனவும் கேட்கப்பட்டது. இதற்கு, ‘அதற்கான வாய்ப்பிருந்தால் அதை இயக்குநரே முடிவு செய்து தெரிவிப்பார்’ எனவும் பகத் ஃபாசில் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in