வாய்ப்புக்காக சமரசம் செய்துகொள்ள அணுகினர்: பிரபல நடிகை பகீர்

வாய்ப்புக்காக சமரசம் செய்துகொள்ள அணுகினர்: பிரபல நடிகை பகீர்
நடிகை எஸ்தர் நோரன்ஹா

திரைப்பட வாய்ப்புக்காகத் தன்னை சமரசம் செய்துகொள்ளுமாறு சிலர் கூறியதாக, பிரபல நடிகை புகார் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் பட வாய்ப்புக்காக, சமரசம் செய்துகொள்ளுமாறு நடிகைகளை அணுகுவதாக பலர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன், சமூக வலைதளத்தில் மீடூ புகார் பரபரப்பானது. பல பிரபலங்கள் மீது புகார்கள் கூறப்பட்டன. அனைத்து மொழி சினிமாத் துறையிலும் இந்தப் புகார் எழுந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை எஸ்தர் நோரன்ஹா, தெலுங்கு திரையுலகில் தன்னை சமரசம் செய்துகொள்ளுமாறு சிலர் அணுகியதாகப் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இவர், பிரபல பாடகர் நோயல் சீன் என்பவரை கடந்த 2019-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் அடுத்த வருடமே விவாகரத்துப் பெற்றனர்.

நடிகை எஸ்தர் நோரன்ஹா, தமிழில் கமல்ஹாசன், பிரபு, காளிதாஸ் நடித்த ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

அவர் கூறியதாவது: “நடிக்கும் ஆர்வம் காரணமாக நான் இந்த துறைக்கு வந்தேன். நான் பயிற்சிபெற்ற நடனக் கலைஞர். என்னால் சிறப்பாக நடிக்கவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் முடியும். பிறகு நான் ஏன் சமரசம் செய்துகொள்ள வேண்டும்? என்று தெரியவில்லை.

இதற்காக நான் விரக்தி அடையவும் இல்லை. நான் புகழ், பணம் உட்பட எதற்கும் ஆசைப்படவில்லை. மேடையிலோ, வீட்டிலோ நடனமாடும்போது கிடைக்கிற அதே மகிழ்ச்சியைதான் சினிமாவும் தருகிறது. தெலுங்கு சினிமாவை மட்டுமே நான் நம்பவில்லை. திறமை இருந்தால் மற்ற மொழிகளில் இருந்தும் வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்புக்காக எந்தச் சூழலிலும் என் சுயமரியாதையை இழக்கவும் சமரசம் செய்துகொள்ளவும் நான் தயாராக இல்லை”.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.