எதிர்பார்ப்பை கூட்டிய ’எக்ஸ்பெண்டபிள்ஸ் 4’... நிஜமாவே வொர்த்தா?

எதிர்பார்ப்பை கூட்டிய ’எக்ஸ்பெண்டபிள்ஸ் 4’... நிஜமாவே வொர்த்தா?

ஹாலிவுட்டில் வெளியாகும் ஒரு படம் ஹிட் ஆனால் போதும், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்படி தான் ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்’ படத்தின் நான்காவது பாகம் வந்திருக்கிறது. டேவிட் கால்ஹாம் உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையில் முதன்முதலாக 2010 இல் வெளிவந்த இதன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சில்வெஸ்டர் ஸ்டாலோன் பிரதான வேடமேற்று கலக்கியிருந்த அதிரடி ஆக்ஷன் படம் அது.

அவரைத் தவிர இன்னும் பல நடிகர்களும் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் உடன் நடித்திருந்தார்கள். இதற்கடுத்து 2012 இல் இரண்டாம் பாகமும், 2014 இல் மூன்றாம் பாகமும் வெளியாகியது.

’எக்ஸ்பெண்டபிள்ஸ்4’
’எக்ஸ்பெண்டபிள்ஸ்4’

முந்தைய பாகத்தில் ஜேசன் ஸ்டாதம், ஜெட் லி, டால்ஃப் லண்ட்கிரென் புரூஸ் வில்லிஸ், லியாம் ஹெம்ஸ்வொர்த், ஜீன் கிளாட் வான் டாம், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் அன்டோனியோ பண்டேராஸ், மெல் கிப்சன், ஹாரிசன் ஃபோர்டு & வெஸ்லி ஸ்னைப்ஸ் அன்டோனியோ பண்டேராஸ், மெல் கிப்சன், ஹாரிசன் ஃபோர்ட் & வெஸ்லி ஆகியோர் நடித்திருக்க தற்போது வெளியாகி இருக்கும் இந்த நான்காம் பாகத்தில் டோனி ஜா, மேகன் ஃபாக்ஸ், ஐகோ உவைஸ் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

’எக்ஸ்பெண்டபிள்ஸ்4’
’எக்ஸ்பெண்டபிள்ஸ்4’

இந்த நான்காம் பாகத்தின் கதை இதுதான். சுர்தோ ரஹ்மத் (ஐகோ உவைஸ்) அணு ஏவுகணைகளை லிபியாவில் உள்ள ஒரு இரசாயன கூடத்திலிருந்து கடத்தி சென்று அரசியலில் தொடர்புடைய ஒரு பணக்காரனிடம் விற்று பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறான். இதன் விலைவாக அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய இரு பெரும் நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயம் எழுகிறது. எக்ஸ்பெண்டபிள்ஸ் அணியினர் இந்த செயல்பாட்டினை தடுப்பதற்காக வருகிறார்கள். முதலில், அவர்களது முயற்சி தோல்வியுற்றாலும் இறுதி வெற்றி யாருக்கு என்பதுதான் மீதிக்கதை.

’எக்ஸ்பெண்டபிள்ஸ்4’
’எக்ஸ்பெண்டபிள்ஸ்4’

கதை தொடங்கிய ஆரம்பத்திலேயே ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்’ அணியின் தலைவன் சில்வெஸ்டர் ஸ்டாலோனை கொன்று விடுகிறார்கள். இவர் இல்லாமல் அணியினர் எப்படி இந்தத் திட்டத்தை முறியடிக்கிறார்கள் என்ற நமக்கு பழக்கப்பட்ட கதையை இந்த பாகத்தில் கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற ஹாலிவுட் படங்களில் திரைக்கதை அடிவாங்கினாலும் மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள், ஒளிப்பதிவு, சிஜி என ஒப்பேற்றுவார்கள். ஆனால், எக்ஸ்பெண்டபிள்ஸ் கதையின் நான்காம் பாகத்தில் திரைக்கதையோடு சேர்த்து ஆக்‌ஷன், ஒளிப்பதிவு என பெரும்பாலான தொழில்நுட்ப பணிகள் சுமாராகவே அமைந்து பார்வையாளர்களை சோதிக்கிறது. இறுதிக்காட்சியில் அந்த பிரம்மாண்ட கப்பலில் வரும் பைக் ஆக்‌ஷன் காட்சி மட்டும் ஆறுதலாக அமைகிறது.

’எக்ஸ்பெண்டபிள்ஸ்4’
’எக்ஸ்பெண்டபிள்ஸ்4’

கதையின் ஆரம்பத்தில் சில்வெஸ்டர் மற்றும் ஜேசன் இருவருக்கும் இடையில் சில தருணங்கள் அட்டாகசமாக அமைந்திருக்க 50 செண்ட் ஜாக்சனும் அங்காங்கே சிரிப்பு மூட்டுகிறார். படத்தின் பட்ஜெட் 100 மில்லியன் டாலர் என்கிறார்கள். ஆனால், படம் நெடுகிலும் ‘என் பிராப்பர்டியை சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா’ என்ற ரீதியிலேயே உப்பு சப்பில்லாத செட்களும், ஆக்‌ஷன் பிராபர்டிகளும் வந்து போகிறது.

‘எக்ஸ்பெண்டபிள்ஸ்’ படத்தின் சிறப்பே அர்ணால்ட், ஹாரிசன் உள்ளிட்ட நடிகர்கள் சர்ப்ரைஸ் எலிமெண்டாக வருவார்கள். அதுபோல, இந்தப் பாகத்தில் டோனி ஜாவ் வருகிறார். இறுதியில் நீங்களும் நானும் என்ன எதிர்பார்த்தோமோ அதுதான் கிளைமாக்ஸிலும் வருகிறது. ஆக மொத்தத்தில் இதுவரை வந்த எக்ஸ்பெண்டபிள்ஸ் சீரிஸ்களிலேயே மிகவும் சுமாரான பாகம் இது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in