நீங்கள் என்னை வாழ்த்திக்கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்ஃபோனியை எழுதி முடித்துவிட்டேன். ஒரு சிம்ஃபோனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்துவிட்டேன் என்ற எனக்கு சந்தோஷமான செய்தியை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், “வணக்கம். என்னைப் பற்றி ஏதோ ஒரு வகையில் தினமும் வீடியோக்கள் வெளியாகின்றன என்ற செய்தியை வேண்டியவர்கள் மூலமாக கேள்விப்படுகிறேன். நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. காரணம், மற்றவர்களை கவனிப்பது என் வேலையில்லை. என் வேலையை கவனிப்பது என் வேலை. என் வழியில் சுத்தமாக சென்று கொண்டிருக்கிறேன்.
நீங்கள் என்னை வாழ்த்திக்கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்ஃபோனியை எழுதி முடித்துவிட்டேன். இங்கே பட இசையில் கவனம் செலுத்திக்கொண்டும், இடையில் விழாக்களுக்கு சென்றுகொண்டிருந்தபோதிலும், ஒரு சிம்ஃபோனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்துவிட்டேன் என்ற எனக்கு சந்தோஷமான செய்தியை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். பியூர் சிம்ஃபோனியாக எழுதி முடித்துவிட்டேன் என்பதை என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகமான இந்த செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பேசியுள்ளார்.
படத்தில் வந்துள்ள பாடல்களின் இசை காப்புரிமை தனக்கே சொந்தம் என இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ பட டைட்டில் டீசரில் தனது பாடல் இசையை அனுமதி வாங்காமல் பயன்படுத்தி யதற்காகவும் அவர் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த வைரமுத்து, ”பாடல்கள் எழுதிய பாடலாசிரியரும் இப்படி உரிமை கொண்டாடினால் என்னவாகும்?” என கேள்வி எழுப்பினார். எனவே இசை பெரிதா? மொழி பெரிதா? என விவாதங்கள் வெடித்தன. இந்த தொடர்பான சலசலப்புகளுக்கு மத்தியில், ‘மற்றவர்களை கவனிப்பது என் வேலையில்லை. என் வேலையை கவனிப்பது என் வேலை’ என இன்று இளையராஜா பதிலளித்துள்ளதும் வைரலாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!
கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!
வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!
'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!