குழந்தையாக மாறி பரவசமடைந்தேன்: 'ஆதி புருஷ்' டீசர் பார்த்த நடிகர் பிரபாஸ் குதூகலம்

குழந்தையாக மாறி பரவசமடைந்தேன்: 'ஆதி புருஷ்' டீசர் பார்த்த நடிகர் பிரபாஸ்  குதூகலம்

'ஆதி புருஷ்' டீசரை முதன் முதன் 3டி எஃபெக்டில் பார்த்த போது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன் என்று நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார்.

இந்தியில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்கிற படத்தை இயக்கி, தேசிய விருது பெற்றவர் ஓம் ராவத். இவரது இயக்கத்தில், ராமாயணக் கதையைத் தழுவி உருவாகிவரும் படம் ‘ஆதி புருஷ்'. இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக ‘பாகுபலி’ புகழ் பிரபாஸும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோனும் நடித்திருக்கிறார்கள். டி - சீரிஸ்,ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஐமேக்ஸ், 3டி முறையில் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது..இதுகுறித்து படத்தின் கதாநாயகனான பிரபாஸ் கூறுகையில்," 'ஆதி புருஷ்' டீசரை முதன் முதல் 3டி எஃபெக்டில் பார்த்த போது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த டீசரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்தோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக உங்கள் அன்பையும், ஆதரவையும் வேண்டிக்காத்திருக்கும் அதேவேளை அடுத்த 10 தினங்களுக்கு இப்படம் குறித்து பல சர்ப்ரைஸான கன்டென்டுகளை வழங்கவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in