பாலியல் வழக்கில் என்னைச் சிக்க வைத்தது அந்த நடிகைதான்: நடிகர் திலீப் பகீர் புகார்

பாலியல் வழக்கில் என்னைச் சிக்க வைத்தது அந்த நடிகைதான்: நடிகர் திலீப் பகீர் புகார்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் என்னைச் சிக்க வைத்தது அந்த பிரபல நடிகைதான் என்று நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகையை, கடந்த 2017-ம் ஆண்டு சிலர் காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இவ்வழக்கு தொடர்பாக பல்சர் சுனி உட்பட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இது தென்னிந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், நடிகை பாலியல் வன்கொடுமை காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பது உண்மை என்றும், இதுதொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளனர்.

மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்

ஆதாரங்களை அழித்தது தொடர்பாக திலீப் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 1-ம் தேதி முதற்கட்ட விசாரணை நடக்க இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் திலீப் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: இந்த வழக்கை தேவையில்லாமல் நீட்டித்துக்கொண்டே செல்கின்றனர். தனி நீதிமன்ற நீதிபதிக்கு பதவி உயர்வு கிடைத்து அவர் வேறு நீதிமன்றத்துக்குச் செல்லும்வரை விசாரணையை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளனர். அதனால், வழக்கை விரைந்து முடிக்க, தனி நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும்.

என் முதல் மனைவி மஞ்சு வாரியரும், பாதிக்கப்பட்ட நடிகையும் டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் அவரின் நெருங்கிய நண்பரும் சேர்ந்து இந்த வழக்கில் என்னைச் சிக்க வைத்துள்ளனர். திரையுலகில் என் வளர்ச்சியைப் பிடிக்காத கும்பலும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.

இவ்வாறு நடிகர் திலீப் கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை, அடுத்த வாரம் வரும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in